சென்னை: ஏரோட்ராம் கமிட்டி எனப்படும் பாதுகாப்புகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சுகந்தி ஐஏஎஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விமானங்கள், விமான நிலையம், பயணிகள் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசித்து விவாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தற்போது இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து, சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயங்கரவாதிகள் விமானங்களை கடத்த முயற்சித்தால், அதை உடனடியாக முறியடிப்பது, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடந்தது என்று சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த கூட்டத்தில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், விமானங்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அனைத்து விமான நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அயலகத் தமிழர் தினம் 2024; 8 பிரிவுகளில் விருதுகள் வழங்க திட்டம்!