சென்னை லிங்குசெட்டி தெருவில் வசித்து வருபவர் மணியம்மை. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், திராவிட கழகத்தில் மாநில மகளிர் அணி பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் போராடி வருவதால், ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற கட்சியினர் தொடர்ந்து சமூக வலைதளம் மூலமாக தொல்லை கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை! - Thirumavalavan
சென்னை: சமூக வலைதளங்களில் தன்னையும் விசிக தலைவர் திருமாவளவனையும் சேர்த்து வைத்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு வரும் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
![திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை! Lawyer](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-placeholder.jpg)
பாமக அன்புமணி ராமதாஸின் புகைப்படத்தை வைத்துள்ள சுரேஷ் குமார் என்ற நபர், சமூக வலைதளத்தில் திருமாவளவனுடன் எடுக்கப்பட்ட தனது புகைப்படம், தேசிய தலைவரான மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவதூறு பரப்பும் வகையில் தவறாக சித்தரித்து பதவிட்டுள்ளதாக மணியம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
இதை போன்று பல்வேறு பெண்களின் புகைப்படத்தை அந்த நபர் தவறாக சித்தரித்து பதிவிட்டு வருகிறார். தன்னையும் விசிக தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு வரும் சுரேஷ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.