தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தலைவராக இருந்த ஜான்சிராணிக்குப் பதில் வேறொருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுவந்தது. இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு நெருக்கமான ஹசீனா சையது, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குச் நெருக்கமான வழக்கறிஞர் சுதா ஆகியோர் போட்டியில் களமிறங்கினர்.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக சுதா நியமனம்! - Mahila Congress President Advocate Sudha
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக வழக்கறிஞர் சுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்
இச்சூழலில், புதிய தலைவராக சுதாவை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவர் சோனியா காந்தி அனுமதி வழங்கியுள்ளார். இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உறுதிசெய்துள்ளார். மேலும், லட்சத்தீவு மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக சஜித்தா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஜனநாயகத்திற்காக குரல் கொடுங்கள்' டிஜிட்டல் பரப்புரை மேற்கொள்ளும் காங்கிரஸ்!