தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு: இன்று ஆலோசனை

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு

By

Published : Dec 29, 2022, 9:52 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. தமிழ்நாட்டில் இதற்கான பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் மூலமும் மையங்கள் மூலமும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் மாவட்ட வாரியாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணின் விவரங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று (டிச. 29) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க:'அல்லேலூயா' என்பது தீவிரவாத சொல் அல்ல - அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details