இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தி.நகரிலுள்ள பா.ஜ.க. மாநில அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட ஐந்து மாவட்டங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் பிரதமர் மோடி சீன அதிபருடான சந்திப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வரும் நிகழ்ச்சிக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "32 இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சியில் தேசிய கொடியே பறக்கும், கட்சிக் கொடி பறக்காது" என்று தெரிவித்தார்.