தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! - கரோனாவை எதிர்கொள்ள ஆலோசனை

சென்னை : கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், மாநகராட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Jun 2, 2020, 2:31 PM IST

சென்னையில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. நேற்று மட்டும் மாநிலத் தலைநகரில் 900-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 15 ஆயிரத்து 770 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கரோனா தடுப்புப் பணி சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், பல ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து தடுப்புப் பணிகளை மேற்கொண்டார்.

இருப்பினும் கரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து அமைச்சர்கள், மாநகராட்சி பிரதிநிதிகளுடன் அம்மா மாளிகையில் கரோனாவைக் கட்டுப்படுத்தமுதலமைச்சர்ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், பெருநகர சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கல்வி கற்க ஏதுவாக இலவச மொபைல்!

ABOUT THE AUTHOR

...view details