சென்னை மாநகரக் காவல் துறை சார்பில், வியாபாரிகளுடன்கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய காவல் துறையினர், “வியாபாரிகள், தொழிலாளர்கள், கடைகளுக்கு வரும் பொது மக்கள் என அனைவரும் கட்டாயம் முகக் கவசங்கள் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கடையின் உள்ளே மக்கள் வரும் போது அவர்களை வெப்ப நிலை மானி கொண்டு சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
கடைகளில் கிருமிநாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு வரும் மக்கள் கட்டாயம் அவற்றைக் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கடைகளுக்கு வெளியே மூன்று அடி தூர இடைவெளி கொண்ட வட்டங்களை வரைந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து அவற்றுக்குள் நிற்க வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும். மேலும் அனைத்து கடைகளிலும் போதுமான அளவு முகக் கவசங்களை வைத்திருக்க வேண்டும். இவற்றை பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்” என காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க:'கரோனா நிதியில் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன?' - ஸ்டாலின்