தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 9,500 பேர் மீது வழக்கு! - சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 9,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK
ADMK

By

Published : Dec 22, 2022, 1:00 PM IST

சென்னை:சொத்துவரி, பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஈ.பி.எஸ் அணி சார்பில், நேற்று(டிச.21) சென்னை முழுவதும் 33 இடங்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் 33 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அதிமுகவினர் 9,500 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அனுமதியின்றி கூடுதல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ராயபுரத்தில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வேப்பேரியில் போராட்டம் நடத்திய அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "அதிமுக கட்சிக்கும் ஓபிஎஸ்-க்கும் சம்பந்தம் இல்லை"- ஜெயக்குமார் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details