தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த நாள் - அதிமுக வாழ்த்து!

சென்னை: முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழுமாறு அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

By

Published : Aug 21, 2020, 3:31 PM IST

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வமும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கி, அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு, நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல்லோடு எருக்கம் பூ, அரளி மலர் மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல் போன்றவற்றைப் படைத்து பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

அதிமுக அறிக்கை

கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எம்ஜிஆர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது வழியில், எங்களது 'விநாயகர் சதுர்த்தி' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம்" என்று வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஆளுநர்கள்

ABOUT THE AUTHOR

...view details