ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம், திருமுல்லைவாயில், அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க நாளை கிருஷ்ணகிரி செல்கின்றனர். இதனால் மாணவிகள் இன்று ஆவடி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வந்து அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் மாணவிகளுடன் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய அரசுப் பணி குறித்தும், மத்திய அரசு வழங்கக்கூடிய விளையாட்டு துறைக்கான நிதி குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும், மாணவிகளுக்கு தேவையான 30 ஆயிரம் ரூபாய் உபகரணங்களை வழங்கினார்.