தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது - இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை - தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது

ஊடக விவாதங்களில் இனி அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்கமாட்டார்கள் என கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ADMK will no longer participate
ADMK will no longer participate

By

Published : Jul 12, 2021, 9:39 PM IST

சென்னை:அதிமுக தரப்பில் இருந்து யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் என இபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அடிப்படை தேவைகள், தினசரி பிரச்னைகள் என பல இருக்கிறபோது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமால், அதிமுகவுக்கு இழுக்கு ஏற்படுத்துவது போலவும், கழகத் தலைவர்களை கலங்கப்படுத்துவது போலவும் தலைப்பு வைத்து ஊடக நிறுவனங்கள் விவாதங்களை நடத்துகின்றன.

இதனால் ஊடக விவாதங்களில் இனி அதிமுக கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்கமாட்டார்கள். வேறு யாரையும் அழைத்து எங்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்க்கவும். இந்த முக்கியமான விவகாரத்தில் தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களின் மேலான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details