தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போய் டீ சாப்பிட்டு வாங்க... அதிமுகவினரை கலாய்த்த அப்பாவு! - ஆளுநர் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக கூறியபோது 'போய் டீ சாப்பிட்டு வாங்க', மானிய கோரிக்கை விவாதத்தின்போது வாங்க என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நகைச்சுவையாக தெரிவித்தார்.

அதிமுகவினரை கலாய்த்த அப்பாவு
அதிமுகவினரை கலாய்த்த அப்பாவு

By

Published : Apr 20, 2022, 8:28 PM IST

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக கூறியபோது, 'போய் டீ சாப்பிட்டு வாங்க, மானிய கோரிக்கை விவாதத்தின்போது வாங்க' என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நகைச்சுவையாக தெரிவித்தார்.

சென்னை:தமிழ்நாடுசட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 20) கேள்வி நேரம் முடிந்த பின்னர் நேரமில்லா நேரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மயிலாடுதுறை சென்றபோது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.

அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழ்நாடுஆளுநர் மயிலாடுதுறையில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவரது கார், கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆளுநருக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. உளவுத்துறை அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கே போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமானிய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்' எனக் கேட்டு சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார்.

அப்போது, அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்ததற்கு குறுக்கிட்டு பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு , "போய் டீ சாப்பிட்டு வாங்க. மானிய கோரிக்கை விவாதத்தின்போது வாங்க " என நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநரைத் தாக்க இது அதிமுக அரசு அல்ல - சட்டப்பேரவையில் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details