தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு - தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

admk
அதிமுக

By

Published : Aug 13, 2021, 10:32 AM IST

Updated : Aug 13, 2021, 10:50 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். அதற்கு இடையிலும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கேட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடிக்கட்டும். பின்னர், உரிய நேரத்தில், அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறிய போதிலும், அதிமுகவினர் அதைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021-2022: செய்திகள் உடனுக்குடன்...

Last Updated : Aug 13, 2021, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details