மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக அதிமுக தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர். நினைவி திறப்பு விழா நிறைவு பெற்ற பின்பு, அதிமுக தொண்டர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பின் மதுபானக்கடையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்! - jayalalitha memorial opening tasmac
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பின்பு அதிமுக தொண்டர்கள் சேப்பாக்கத்திலுள்ள மதுபானக்கடையில் மது வாங்க குவிந்தனர்.
நினைவிட திறப்பு விழாவிற்கு பின் மதுபானகடையில் குவிந்த தொண்டர்கள்
இந்நிகழ்ச்சியின் போதே மெரினா கடற்கரை அருகேயுள்ள மதுபானக்கடைகளில் மதுபானம் வாங்க அதிமுக தொண்டர்கள் வந்தவண்ணமே இருந்தனர். 12 மணிக்கே கடை திறக்கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும், காலை 10 மணியிலிருந்தே மதுபானக்கடைகளுக்கு முன்பு குவியத்தொடங்கினர். இந்நிலையில், 12மணிக்கு கடை திறந்தவுடன் மதுபான விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
இதையும் படிங்க:ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி