தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 5 மண்டலங்களாக மாற்றம்!

சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஐந்து மண்டலங்களாக மாற்றியமைத்து அக்கட்சியின் தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

admk
admk

By

Published : Jul 3, 2020, 7:54 PM IST

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிவிப்பின் படி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை, சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை என ஐந்து மண்டலங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக தொழில்நுட்ப பிரிவு மண்டலச் செயலாளர்களாக கீழ்க்காணும் மண்டலங்களுக்கு, கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1, சென்னை - அஸ்பயர் சுவாமிநாதன் (தியாகராயநகர், தென் சென்னை வடக்கு மாவட்டம்)

2, வேலூர் - எம். கோவை சத்யன் (கழக செய்தித் தொடர்பாளர்)

3, கோவை - சிங்கை ஜி. ராமச்சந்திரன் (சிங்காநல்லூர், கோவை மாநகர் மாவட்டம்)

4, திருச்சி - பி. வினுபாலன் (தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் )

5, மதுரை - வி.வி.ஆர். ராஜ்சத்யன், (பழைய விளாச்சேரி சாலை, மதுரை)

மேற்காணும் மண்டலங்களுக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை நிர்வாகிகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பதிவிட்ட இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details