தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர்கள் துணை முதலமைச்சருடன் சந்திப்பு - ADMK RajyaSabha MP Candidates

சென்னை: அதிமுக சார்பில் ராஜ்ய சபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள வாசன் உள்ளிட்ட மூவரும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ops

By

Published : Mar 10, 2020, 1:05 PM IST

இம்மாதம் 26ஆம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக, திமுக சார்பில் தலா மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஓ. பன்னீர்செல்வத்துடன் ஜி.கே. வாசன்
வாழ்த்து பெறும் கே.பி. முனுசாமி

இவர்கள் மூவரும் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவதாக அதிமுக தலைமை நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மூவரும் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details