மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - ADMK Raj Sabha
12:31 March 09
#Breaking - ADMK Rajya Sabha Candidates Announcement
மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.