அதிமுகவின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது,"தினகரன், சசிகலா உள்ளிட்டோரை அவர்கள் செய்த தவறுகளுக்காக போயஸ் கார்டன் பக்கமே விடாமல் வைத்திருந்தார் ஜெயலலிதா.
'உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு' - பொன்னையன் தகவல் - 3 MLAS
சென்னை: சபாநாயகரின் நோட்டீஸை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று அதிமுக மூத்தத் தலைவரும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட அவர்கள் திமுகவுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்பது எப்போதும் நடக்காது. நாடாளுமன்றம் மட்டுமின்றி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிக இடங்களில் வெற்றியை அதிமுக பெறும் என்பதால் தினகரன், ஸ்டாலின் ஆகியோரின் கனவு பலிக்காது.
எப்படியாவது ஒரு நாளாவது முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என ஸ்டாலின் வெறிபிடித்து அலைகிறார். அதற்கு தமிழ்நாடு மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும். வாக்குப் பெட்டிகள் இடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதனை அரசியலாக்கும் திமுகவினர் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்தார்.