பொள்ளாச்சி மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்புள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் "ஸ்டாலினின் இந்தக் கருத்து உண்மைக்கு புறம்பான தகவல், அவரால் ஏற்பட்ட மன உழைச்சலுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மருமகன் வி. சபரீசன், கலைஞர் தொலைக்காட்சி, நக்கீரன் ஆசிரியர் கோபால், ஜூனியர் விகடன் ஆசிரியர் அறிவழகன் உள்ளிட்டோர் எதிர் மனு தாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை இன்று (ஜூலை21) விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, "பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு குறித்து மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர் மனு தாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:'மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்'