சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜன 11) மூன்றாவது நாளாக தொடங்கியது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, பேரவைத் தலைவர் அப்பாவுவை, அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்துள்ளதை சுட்டிக்காட்டி மீண்டும் வலியுறுத்தினர். ஆனால், அப்பாவு எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதிமுக ‘MLA’க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர் - அதிமுக MLA க்கள் வெளிநடப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்காமல் இருக்கும் பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்து சென்றனர்.
கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை
இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றனர். அதன்பின் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: ’எங்க தொகுதியில் அப்படி எதுவும் நடக்கவில்லையே’ - சபாநாயகர் கேள்வி
Last Updated : Jan 11, 2023, 12:49 PM IST