தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார் - pongal celebration

சென்னை: இந்த தை மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்றும் அதிமுக ஆட்சி நூற்றாண்டு வரை நிலைத்து நிற்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jan 16, 2020, 12:03 PM IST

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டும், பொங்கல் தினத்தை முன்னிட்டும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஜெயவர்த்தன் ஆகியோர் பங்கேற்று இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்," உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அடிப்படையில் அதிமுக ஆட்சி இந்த தை மட்டுமல்லாமல் எதிர்வரும் காலங்களிலும் அதிமுகவின் ஆட்சி மலரும்.

அதிமுக அரசு நூற்றாண்டு காலம் நிலைத்து நிற்கும். தமிழனுடைய அடையாளம் வீரமும், காதலும். வீரத்தின் அடையாளமாய் இருக்கின்ற ஜல்லிக்கட்டை அனைத்து மக்களும் பார்த்து வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: சமூக நல்லிணக்கத்தை போற்றும் சமத்துவ பொங்கல்

ABOUT THE AUTHOR

...view details