தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை: உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்... - FORMER MINISTER JAYAKUMAR RELEASED ON BAIL FROM PUZHAL JAIL

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாரை அங்கு திரண்டிருந்த 5000த்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை.. விண்ணை பிளந்த அண்ணன் DJ வாழ்க கோஷம்.. பொய் வழக்குப் போடும் ஸ்டாலின் ஒழிக..
20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை.. விண்ணை பிளந்த அண்ணன் DJ வாழ்க கோஷம்.. பொய் வழக்குப் போடும் ஸ்டாலின் ஒழிக..

By

Published : Mar 12, 2022, 10:47 AM IST

Updated : Mar 12, 2022, 1:03 PM IST

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷ் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை..

ஆளுங்கட்சியைச்சேர்ந்த மகேஷ் குமாரின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தன்னை இந்த வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

மகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு (மார்ச்.8) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை மற்றும் மகேஷ்குமார் தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை மற்றும் மகேஷ்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை (மார்ச் 11) நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (மார்ச் 11) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் சரியாக விசாரிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். புகார்தாரர் தரப்பிலும் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும். அங்கு உள்ள காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டர்.

ஜெயக்குமார் வெளியே வந்த போது அண்ணன் DJ வாழ்க என அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்

மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஏற்கனவே 2 வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள நிலையில், 3-வது வழக்கில் ஜாமின் பெற்றுள்ளதால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை..

இந்நிலையில், திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 6.30 மணியளவில் சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேலான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர்.

புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியே வந்த போது அண்ணன் DJ வாழ்க என அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அதன்பின் பேசிய ஜெயக்குமார், பொய் வழக்குப் போடும் ஸ்டாலின் ஒழிக" என்று முழக்கமிட்டார்.

இதையும் படிங்க: கர்நாடகா கோயில்களில் சசிகலா பூஜை

Last Updated : Mar 12, 2022, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details