சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில்,' மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைப் போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையினர் திறமை மிக்கவர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் சமாளித்து செயல்படுவார்கள்' என்றும் தெரிவித்தார்.
‘பத்தாயிரம் உதயநிதிகள் வந்தாலும்... எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ - அதிரடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்! - admk minister jeyakkumar
சென்னை: 'திமுகவில் ஒன்று அல்ல; பத்தாயிரம் உதயநிதிகள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
minister jeyakkumar
மேலும் அவர், '2021ஆம் ஆண்டு வரும் தேர்தலில் திமுக எத்தனை முறை தலைகுப்புற பல்டி அடித்தாலும் ஆட்சிசெய்யும் என்பது ஒரு கனவு தான். திமுக ஆட்சிக்கு வரப் போவதில்லை. உதயநிதியின் வருகை திமுகவிற்குப் பலமா? பலம் இல்லையா என்பதை திமுகவினர்தான் தெரிவிக்க வேண்டும். ஒரு உதயநிதி அல்ல; பத்தாயிரம் உதயநிதி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது’ என்று கூறினார்.
Last Updated : Aug 26, 2019, 8:47 AM IST