தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை! - முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை

சென்னை: அதிமுக தலைமை அலுவலத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் உள்ளிடோர் அவசர ஆலோசனையை மேற்கொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Dec 22, 2019, 11:56 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி நாளை சென்னையில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த பேரணிக்கு காவல் துறையினர் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், நிலோபர் கபில், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அவசர ஆலோசனையை மேற்கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details