சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் நான்காயிரம் பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு குவிந்தனர்.
அவர்களுக்கு மதிய உணவாக சைவ சாதம் மட்டுமே வழங்கப்பட்டது. பொதுவாக அதிமுக பொதுக்குழு கூட்டம் என்றாலே சிக்கன், மட்டன் என்று 'கறி சோறு' கண்டிப்பாக இருக்கும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரையில் பொதுக்குழு கூட்டம் நேரத்தை விட சாப்பாடு நேரம் அதிகமாக இருக்கும். கடந்த பொதுக்குழுவில் கூட அசைவ சாப்பாடு வழங்கப்பட்டது. மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஆகியவை வழக்கமாக இடம்பெறும். தேவையானவர்களுக்கு சைவமும் அளிக்கப்பட்டது.