பெங்களூருவில் இருந்து நாளை மறுநாள் (பிப்.8) சசிகலா சென்னை வருகிறார். இதற்காக அமமுகவினர் சிறப்பு வரவேற்பு அளிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் உடன் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சசிகலா வருகை குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கூட்டத்தில் சசிகலா வருகை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அதிமுக அரசின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை துண்டு பிரசுரங்கள், மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வது மற்றும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.