சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் திரண்டு , அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்
ADMK LEADERSHIP TUSSLE LIVE: ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் - சைதை துரைசாமி
13:18 June 22
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்
13:11 June 22
எடப்பாடி பழனிசாமிக்கு சைதை துரைசாமி ஆதரவு!
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆதரவு தெரிவித்தார்.
12:58 June 22
பொதுக்குழுவுக்கு வாருங்கள்! ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்று , எந்த பிரச்சனையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12:41 June 22
ஜெயலலிதா நினைவிடம் செல்லும் ஓபிஎஸ் தரப்பு! தர்மயுத்தம் 2.0 ?
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் இல்லத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருக்கின்றனர்.
12:30 June 22
ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை , பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , ஓபிஎஸ் தரப்பு தவறு மேல் தவறு செய்கிறது எனவும் ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்க வேண்டும் என பெரும்பாலானோர் விரும்புவதாக கூறினார்.
12:22 June 22
முன்னாள் எம்.பி மைத்ரேயன் எடப்பாடிக்கு ஆதரவு
நேற்று வரை ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆதரவு தெரிவித்தார்.
12:16 June 22
எடப்பாடி பழனிசாமிக்கு வேளச்சேரி அசோக் ஆதரவு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அசோக் நேற்று வரை ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியுள்ளார்.
11:57 June 22
நாளை பொதுக்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் , முக்கிய நிர்வாகிகள் , மூத்த தலைவர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.