சென்னை: அதிமுகவின் 50ஆவது ஆண்டு விழா வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று (அக்.11 ) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளான ஜெயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொன்விழா கொண்டாட்டம் தவிர, ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதிமுகவின் புதிய அவை தலைவர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், " அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகளில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்ததுள்ளது. இந்த பெருமை எந்த ஒரு கட்சிக்கும் கிடையாது. அதிமுக ஆட்சியில் ஐந்து முதலமைச்சர்கள் இதுவரை ஆண்டுள்ளனர்.
பல சோதனைகள், இன்னல்களை தாண்டி அதிமுக கட்சி வெற்றியோடு இயங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பொன்விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.
சீமானின் கருத்தும், ஜெயக்குமாரின் நகைச்சுவையும்