தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கி, தலை குனியும் நிலையில் உள்ளது” - ஜெயக்குமார் காட்டம்! - ஆணையர் ராதாகிருஷ்ணன்

Jayakumar alleges CM breakfast plan: அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல் துறையினர் இன்று வெட்கி, தலை குனியும் நிலையில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jayakumar alleges CM breakfast plan
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 8:59 PM IST

சென்னை:எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை மறைத்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை முன்னிலைப் படுத்துவதாக கூறி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஆக.30) மனு அளித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு காலை சிற்றுண்டி திடத்தை கொண்டு வந்துள்ளது.

ஆனால் இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான். சென்னையில் 358 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மையங்களில் சத்துணவு திட்டத்தை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் என எழுதுகிறார்கள். உங்கள் படத்தை வைத்துக்கொள்வதில் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஏன் எங்கள் தலைவரின் படத்தை மறைக்கிறீர்கள்?. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு காலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமில்லை. எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும். இல்லையெனில் நாங்கள் எழுதி வைக்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள்.

இதையும் படிங்க:அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

இந்த அரசு, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, காவல்துறை என யாருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கி, தலைக்குணியும் நிலையில் உள்ளது. கட்சி ஆட்கள் தவறு செய்தால் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல், ஊக்கப்படுத்துகிறார்.

கட்சி ஆட்களை அடக்கி வைக்காததால், அவிழ்த்துவிட்ட மாடுகளை போல் மேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தான் கோடநாடு குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கோடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். எதற்காக குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் எடுக்கிறார்கள். அதனால் தான் சிபிஐ விசாரணை கூறுகிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க:"அலுவலர் தேர்வுகளில் இந்தி கட்டாயமில்லை" - NTA அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details