தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2021, 7:14 AM IST

Updated : Dec 1, 2021, 7:26 AM IST

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

சென்னை:கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அன்வர் ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

முன்னாக, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியதாக அன்வர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கட்சி தலைமை இந்த முடிவு எடுத்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: கேரள மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்து அனுமதி- முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Dec 1, 2021, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details