முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, நீலோபர் கபில், சரோஜா உள்ளிட்ட பலர் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்தனர்.