தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக தேர்தல் அறிக்கை துருப்பிடித்த இரும்புத்துண்டு: தமிழச்சி தங்கபாண்டியன் - சென்னை

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை துருப்பிடித்த இரும்புத்துண்டு என தென் சென்னை திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் விமர்சித்துள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன்

By

Published : Mar 24, 2019, 9:18 AM IST

Updated : Mar 25, 2019, 10:03 AM IST

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சென்னை தெற்கு மாவட்ட களப்பணியாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் கலந்துகொண்டு தென் சென்னை திமுக தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனைஆதரித்துப்பேசினர்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், "பணியாற்றுவதில் ஓட்டப்பந்தய குதிரைகளைப் போலவும் போர்க்களத்தில் யானைகளைப் போலவும் இருக்கின்ற தோள் கொடுக்கின்ற கூட்டணி கட்சியினரின் துணையோடு வெற்றி பெறுவோம் என்பது 100 விழுக்காடு உறுதி.

திமுகவின் தேர்தல் அறிக்கை அத்தனை தரப்பு மக்களின் கோரிக்கைகள், திட்டங்களை இணைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக்கூறி தொண்டர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும்.

திமுக-அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டுப்பாருங்கள். ஒன்று உரிமைகளை உயர்த்தி பிடிக்கின்ற போர்வாள். இன்னொன்று துருப்பிடித்து எதற்கும் பயன்படாமல் தரையில் கிடக்கும் இரும்புத்துண்டு" என விமர்சித்துப் பேசினார்.

Last Updated : Mar 25, 2019, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details