இதுதொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”புதுச்சேரி மாநில கழகத் துணைத் தலைவர் உமாபதி உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். உமாபதி கழகத்தின் மீதும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீதும் மிகுந்த விஸ்வாசம் கொண்டு ஆரம்ப காலம் முதல் கழகப் பணிகளை சிறப்புற ஆற்றி வந்துள்ளார்.
’கழக விஸ்வாசி உமாபதி’ - அதிமுக இரங்கல் - admk condolences Vice-president of the ADMK Puducherry unit N Umapathy's demise
சென்னை: புதுச்சேரி மாநில கழகத் துணைத் தலைவர் உமாபதி மறைவிற்கு அதிமுக சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
admk condolences Vice-president of the ADMK Puducherry unit N Umapathy's demise
அன்புச் சகோதரர் உமாபதி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கொலை - மேலும் 9 பேர் கைது