தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரை அடித்து உலையில் போட்டவர் சசிகலா - அமைச்சர் சி.வி. சண்முகம் - அதிமுக அமைச்சர்கள் புகார்

சென்னை: மனித வெடிகுண்டாக மாறி தமிழ்நாட்டில் நுழைவோம் என அச்சுறுத்தும் வகையில் பேசிய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

admk
admk

By

Published : Feb 6, 2021, 6:51 PM IST

Updated : Feb 6, 2021, 10:36 PM IST

தண்டனைக் காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையில் போரூர் முதல் மெரினா வரை 12 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்க அனுமதி வழங்கக் கோரி அமமுக நிர்வாகி காவல்துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால், இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர்கள் நாங்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழ்நாட்டிற்கு வருவோம் என அச்சுறுத்தும் விதமாக தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சிவி சண்முகம்

இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கும்படி அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சண்முகம் கூறுகையில், "சசிகலா சென்னை திரும்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் டி.டி.வி. தினகரன், சசிகலா அதிமுக கட்சி கொடியுடன் தான் வருவார் என்று கூறியுள்ளார். 'அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் டி.ஜி.பியிடம் இல்லை முப்படையினரிடம் மனு கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை' என டிடிவி தினகரன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மனித வெடிகுண்டாக அமமுகவினர் மாறி தமிழ்நாட்டில் நுழைவார்கள் என்று அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கூறியிருக்கின்றனர்.

மக்களை அச்சுறுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய டி.டி.வி. தினகரன், அமமுக கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமமுக தீட்டியுள்ள சதி திட்டத்திற்கும் அதிமுக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான்கு ஆண்டுகளாக அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊரை அடித்து உலையில் போட்டவர் சசிகலா.சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்துவிட்டு, நான் தான் உண்மையான அதிமுக என்று கூறுவது சரியானது இல்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் ஆகியோர் ஒரு பிரிவாகவும், சசிகலா. டிடிவிதினகரன் ஒரு தரப்பாகவும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில்,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர்அடங்கிய பிரிவுக்கு தான் இரட்டை இலை சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்கள் தொங்கிய வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்து, நான் தான் உண்மையான அதிமுக எனச் சொல்வது கண்டிக்கத்தக்கது " என்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்திக்க வந்த அதிமுக அமைச்சர்கள் யார் பேசுவது என்று விவாதித்தபடியே ஒருவரை ஒருவர் கைகாட்டினர். கடைசியில், அதிமுகவில் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் பெயரைச் சொல்ல பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதையும் படிங்க: சசிகலா பிப். 8இல் தமிழ்நாடு வருகை: இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

Last Updated : Feb 6, 2021, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details