சென்னை:நகர்புறஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடங்கள் பங்கீடு தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், ஜெயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சுமார் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், மாலை 6 மணிக்கு மேலும் பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில், இன்று (ஜன. 29) இரவுக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்தந்த மாவட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விசிகவிற்கு தலைவர் பதவி - திருமாவளவன் முதலமைச்சரிடம் ஆலோசனை