சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 31) தாக்கல்செய்யப்பட்டது.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைகழத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலைவாணர் அரங்கம் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
குரோம்பேட்டையில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் இதனை கண்டிக்கும் வகையில், சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தன்சிங், முன்னாள் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடாதே என்றும், அம்மா பல்கலைகழகத்தை ரத்து செய்யாதே என்றும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிப்பு