சென்னை : நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஜன.30) வெளியானது.
தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19 அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடங்கள் பங்கீடு தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு கூட்டம் நடைபெற்றது.
அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு - TN Urban body elections
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
இங்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்றும் இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தொகுதி பங்கீட்டில் இழுபறி இருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, மாவட்டம் வாரியாக வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்