தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2022, 10:59 PM IST

ETV Bharat / state

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை:அதிமுகவில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் நான்கு இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (மே 25) அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பிரதமர் வருகை - சென்னையில் நாளை போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details