சென்னை:மயிலாடுதுறையில் நேற்று (ஏப். 19) ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப். 20) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறையில் ஆளுநர் நிகழ்ச்சிக்கு சென்ற போது, அவர் கார் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தது. போராட்டக்காரர்களுக்கு காவல்துறையே முன் வந்து பாதுகாப்பு அளித்துள்ளது. காவல்துறையின் செயல் கண்டிக்கதக்கது.
ஆளுநர் கார் மீது நடைபெற்ற தாக்குதல் காவல்துறை மீது ஏற்பட்டுள்ள கரும்புள்ளி. திமுக ஆட்சியில் காவல்துறை செயல் இழந்துள்ளது. ஆளும் கட்சி நேரடியாக தலையிடாமல், மற்ற கட்சிகளை வைத்து, இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. ஆளுநர் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் பின்புலம் தெளிவாக தெரிகிறது.