தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்யக்கூடாது- மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக அறிவுரை - admk advice to district secretaries

சென்னை: கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

admk-advice-to-district-secretaries-for-local-elections
admk-advice-to-district-secretaries-for-local-elections

By

Published : Jul 9, 2021, 10:36 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தயாராகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதாக அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் மீது பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என சசிகலா அறிவித்துள்ள நிலையில், கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:தேர்தல் வாக்குறுதிகளை திமுக விரைந்து செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு தழுவிய போராட்டம் - அதிமுக

ABOUT THE AUTHOR

...view details