தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைப்பு! - பி.எட் சேர்க்கை

சென்னை: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூன்று அரசு கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையினை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது

அரசு கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்திவைப்பு!
அரசு கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நிறுத்திவைப்பு!

By

Published : Sep 17, 2020, 2:59 PM IST

சென்னை, குமாரபாளையம், புதுக்கோட்டை, சென்னை வெலிங்டனில் உள்ள பி.எட் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான பி.எட் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட 71 தனியார் பி.எட் கல்லூரிகளில் இந்த ஆண்டு அங்கீகாரம் ரத்து செய்து தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் விதிகளை பின்பற்றாத காரணத்தால் சென்னை வெலிங்டன், குமாரபாளையம், புதுக்கோட்டை உள்ளிட்ட மூன்று அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையினை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் விதிகளுக்குட்பட்டு பேராசியர்கள், கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்படாதது, உட்கட்டமைப்பு வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இந்த கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது. விளக்கத்தை 90 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். உரிய விளக்கத்தை அளிக்க தவறினால் இந்த ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details