பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பில் சேர்க்க கோரிய ஹெச்.ஐ.வி. பாதித்த மாணவருக்கு சேர்க்கை வழங்க பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். அச்செய்தி ஆங்கில பத்திரிகையில் வெளியானதன் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
ஹெச்.ஐ.வி பாதித்த மாணவர் விவகாரம்: கல்வி அலுவலர்கள் விளமளிக்க உத்தரவு! - மனித உரிமை ஆணையம்
சென்னை: ஹெச்.ஐ.வி. பாதித்த மாணவருக்கு அரசு பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரத்தில் பதிலளிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
human rights
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களில் விளக்கமளிக்க பள்ளிக்கல்வி இயக்குநர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.