சென்னை:எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் தனியார் கல்லூரியில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 28 ந் தேதி முதல் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளான சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் ஓயிட் மெமோரியல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி.(ஓமியோபதி) மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஓமியோபதி மருத்துவத்திற்கான அகில இந்திய முதுநிலை மருத்துவப்படிப்பு நுழைவுத்தேர்வு 2021-ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (முறையே அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக) www.tnhealth.tn.gov.in – என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் சென்னை-106 அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி இயக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது எந்தவொரு அரசு இந்திய மருத்துவம் (ம) ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்தோ விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.