தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.சி, எஸ்.டி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் - Admission

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் எஸ்.சி, எஸ்.டி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

By

Published : Jun 11, 2019, 11:00 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின துறையின் கீழ் 22 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுதிகளில் தங்க மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த வருமான வரையறையின் கீழ் வரும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன், மூன்று பாஸ்போர்ட் அளவு போட்டோ, குடும்ப அட்டை நகல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை இணைத்து சுய கையொப்பமிட்டு ஒப்படைக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் ஜூன் 26ஆம் தேதியும், கல்லூரி மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details