சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் போதை பொருள்கள் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல் துறையினரால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. குறிப்பாக முதலமைச்சரின் உத்தரவுப்படி கடந்த மாதத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக ஆயிரத்து 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட ஆயிரத்து 221 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.35 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 299 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பிரத்யேக தொடர்பு எண்
அதேபோல் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கடத்தியதாக 7 ஆயிரத்து 708 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 டன் குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி கல்லூரிகள், பள்ளிகள் அருகே போதைப் பொருள்கள் விற்பவர்கள் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, பிரத்யேக தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது.