தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் தேவை- தமிழ்நாடு அரசு - local body election

புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நநாடு அரசு தெரிவித்துள்ளது.

Additional Time needed to hold local elections in 9 districts: Government of Tamil Nadu
9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் தேவை- தமிழ்நாடு அரசு

By

Published : Jun 23, 2021, 3:04 PM IST

சென்னை:கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் ஊரகளவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல், நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று(ஜூன் 22) உத்தரவிட்டது.

மேலும், தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் கூறியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையும் சூழலில், அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நநாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர்கள், அரசு அலுவலர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - செப்டம்பர் 15க்குள் நடத்த உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details