சென்னை:திருவேற்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் கூடுதல் தலைமை ஆசிரியராக 49 வயதுடைய ஒருவர் பணியாற்றிவந்தார். இவர் தனது வகுப்பில் பயிலும் மாணவிகளின் கையைப் பிடித்து போர்டில் எழுத வைப்பதும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதுமாக இருந்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரித்தபோது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.