தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை - டெல்லி இடையே கூடுதல் விமான சேவை! - சென்னையில் இருந்து டெல்லி செல்ல கூடுதல் விமானம்

ஏர் இந்தியா நிறுவனம் சென்னை - டெல்லி இடையே புதிதாக நான்கு விமான சேவைகளை தொடங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை - டெல்லி இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை - டெல்லி இடையே கூடுதல் விமான சேவை
சென்னை - டெல்லி இடையே கூடுதல் விமான சேவை

By

Published : Jan 3, 2023, 2:58 PM IST

Updated : Jan 3, 2023, 3:12 PM IST

சென்னை:ஏர் இந்தியா நிறுவனம் சென்னை - டெல்லி இடையிலான பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் புதிதாக சென்னை - டெல்லி இடையே 4 விமான சேவைகளை ஜன.2 முதல் துவங்கியுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 7:50 மணிக்கும், மாலை 3:40 மணிக்கும் 2 இரண்டு விமானங்கள் சென்னை - டெல்லி இடையே புதிதாக இயக்கப்படுகின்றன.

அதேபோல் டெல்லி - சென்னை இடையே பிற்பகல் 2:45 மணி, இரவு 10:35 மணி ஆகிய நேரங்களில் இரண்டு புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து டெல்லி சென்று வரும் பயணிகளின் வசதிக்காக, ஏர் இந்தியா நிறுவனம் புத்தாண்டு பரிசாக ஒரே நாளில் 4 புதிய விமான சேவைகளை நேற்றிலிருந்து இயக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே சென்னை - டெல்லி இடையே 19 விமான சேவைகளும், டெல்லி - சென்னை இடையே 19 விமான சேவைகளும், என மொத்தம் 38 விமான சேவைகள் இயங்கிக் கொண்டு இருந்தன. ஆனால் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பயணிகளின் நலன் கருதி ஏர் இந்தியா விமான நிறுவனம், மேலும் 4 விமான சேவைகளை புதிதாக தொடங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது சென்னை - டெல்லி - சென்னை இடையே தினமும் 42 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: தாஜ்மஹாலில் QR code மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

Last Updated : Jan 3, 2023, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details