தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆப்பிள் ஐ பேடு லஞ்சமாக கேட்ட புகார் - வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் விடுதலை!

முடக்கப்பட்ட வங்கிக்கணக்கை விடுவிக்க 10 லட்சம் ரூபாயும், ஆப்பிள் ஐ பேடும் லஞ்சமாக கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் ராஜனை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆப்பிள் ஐ பேடு லஞ்சமாக கேட்ட வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குனர் விடுதலை
ஆப்பிள் ஐ பேடு லஞ்சமாக கேட்ட வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குனர் விடுதலை

By

Published : Oct 3, 2022, 11:01 PM IST

சென்னை:சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக 2012ஆம் ஆண்டு சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனைகளை நடத்தி, ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதேபோல சூப்பர் கிங்ஸ் மியாட்சின் என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கக்கோரி அந்நிறுவனத்தின் சார்பில் ஃபரூக் உபைத்துல்லா என்பவர், வருவாய் புலனாய்வு இயக்குநரக கூடுதல் இயக்குநராக இருந்த சி.ராஜனை அணுகியுள்ளார்.

அதற்கு, 10 லட்சம் ரூபாயும், ஆப்பிள் ஐ பேடும் லஞ்சமாக கேட்டதாகவும், முன்தொகையாக 2 லட்சம் ரூபாயும், ஐ பேடும் பெற்ற ராஜன் மற்றும் அவரது டிரைவர் முருகேசனை சி.பி.ஐ. கைது செய்தது.

இருவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெஹபூப் அலிகான், வழக்கில் சிபிஐ கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, ராஜனையும், அவரது டிரைவர் முருகேசனையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி வழங்குக - ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் வென்றவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details