சென்னை:மலேசியா நாட்டுக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, இதுவரையில் தினமும் 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள், 1 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தமாக, இந்த 5 விமானங்களும் தினமும் சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கும் 10 விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
மலேசியா நாடு சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதாலும், மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.
ஆனால் சென்னையில் இருந்து தினமும் 5 விமானங்கள் மட்டுமே மலேசிய நாட்டிற்கு இயக்கப்படுவதால் சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கு, விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை - கோலாலம்பூர் - சென்னை இடையே தினசரி விமான சேவையில் புதிதாக, பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க:ரயிலில் நெய் கொண்டு செல்ல தடையா? - என்னென்ன பொருட்களை ரயில் பயணத்தில் கொண்டு செல்லலாம்?